கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் லட்சக்கணக்கானோர் போட்டுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முக்கியமானவர் ஆவார்.
இந்த வரிசையில் கம்போடிய பிரதமர் ஹுன்சென்னும் சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். நாட்டிலேயே முதல் நபராக இந்த தடுப்பூசியை அவர் போட்டுள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இன்று நான் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த விவகாரத்தில் நான்தான் முதலில் இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் அதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்' என்று கூறியிருந்தார்.
கம்போடியாவுக்கு நன்கொடையாக சீனா வழங்கியிருக்கும் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை ஏற்பதாக கூறியுள்ள ஹுன்சென், நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த 10 லட்சம் டோஸ்கள் போதாது என்றும், நாட்டில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற்
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அ
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
