இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள் ட்வின்ஸ் அதாவது ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளுமாக நான்கு குழந்தைகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது வயிற்றுக்குள் 4 குழந்தைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் தற்போது தாயும், 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
