உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மக்களின் மன உறுதியை சிதைக்க பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய உளவு அமைப்பின் இரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உக்ரைனியர்களின் மன உறுதியை சிதைக்கும் வகையில் போராட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மற்றும் கடுமையான சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது 10வது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வருகின்றது.
இந்நிலையில், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனில் நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்ய படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
