More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • கண்டுகொள்ளாத இந்தியத் தூதரகம்; உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் கவலை!
கண்டுகொள்ளாத இந்தியத் தூதரகம்; உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் கவலை!
Mar 04
கண்டுகொள்ளாத இந்தியத் தூதரகம்; உக்ரைனில் காயமடைந்த இந்திய மாணவர் கவலை!

 உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.



உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24 ஆம் திகதி போர் தொடுத்த நிலையில் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றனர்.



இந்நிலையில், கீவ் நகரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அந்த மாணவர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், இப்போது அவர் உடல்நிலை எப்படியுள்ளது என்ற நிலவரம் தெரியவில்லை. காயமடைந்த மாணவர் கீவ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது.



இது தொடர்பாக போலந்தின் ரிசோ விமான நிலையத்தில் பேட்டியளித்த மத்திய மந்திரி வி.கே.சிங், கூறியதாவது,



கீவ் நகரில் இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். அவர் இப்போது சிகிச்சையில் இருக்கிறார். போரின்போது இதுமாதிரியான சம்பவங்களை தவிர்க்க முடியாது என்றார். துப்பாக்கி குண்டுக்கு மதமோ, தேசியமோ தெரியாது.



கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தொடர்ந்து தூதரகம் அறிவுறுத்தி வருகிறது. உக்ரைனில் இன்னும்1700 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.அவர்கள் அனைவரையும் மீட்பதே இலக்கு” என கூறினார்.



இதேவேளை ஏற்கெனவே கார்கிவில் உணவு வாங்கச் சென்ற போது ரஷிய குண்டுக்கு கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா இரையாகினார். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மேலும் ஒரு இந்திய மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.



துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோட், இந்தியா டுடே டிவியிடம் கூறுகையில் , மூன்று நான்கு பேர் எங்களை நோக்கி சுட்டனர். இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை

Mar11

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இரà¯

Jan19

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Feb16

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணபà¯

Mar06

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா மà

Feb25

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்à

Mar04

 உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காà

Jan24

கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று

Feb04

நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்à

May27
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (03:17 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 14 (03:17 am )
Testing centres