உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் ( Gopalappillai Amirthalingam) சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய மோதலால் இலங்கை எதிர்நோக்கப்போகும் விளைவுகள் குறித்து ஐபிசி தமிழ் செய்திப் பிரிவு வினவிய போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து உக்ரைனுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக தற்போது இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை, உக்ரைன் உட்பட ரஷ்ய பிராந்தியத்தில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களில் உக்ரைனும் ரஷ்யாவும் முன்னணியில் உள்ளனர்.
இதனால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.
இதேவேளை, உக்ரைனில் அதிகரிக்கும் வன்முறை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்ய – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் எனவும் யுத்தத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை இரு நாடுகளும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
