கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
எனவே பாதுகாப்பற்ற சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்ட சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடத்தைகளே இந்த துயரமான போக்குக்கு இட்டுச் சென்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதுபோன்ற பயணங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினால் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்புக்கூறவேண்டும்.
மதுபோதையில் ஆற்றில் குளிக்கச்சென்ற மற்றும் நீராடச் சென்ற சில சிரேஸ்ட மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதுபோன்ற 18 சம்பவங்கள் பதிவாகின.
இந்தநிலையில் பாதுகாப்பற்ற பயணங்களுக்கு மாணவர்களை ஒழுங்கமைத்து அவர்களுடன் சென்றதற்காக சுமார் ஆறு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு அதிபர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு நீரில் மூழ்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 16 பேர் மாணவர்களாவர் என்றும் குருநாகல் மாவட்ட சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
