ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, பி.வி.சிந்துவுக்கு விருந்துடன் கூடிய ஒரு பாராட்டு விழாவை நடத்தி உள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, சிரஞ்சீவி தனது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பலரையும் அழைத்திருந்தார்.
குறிப்பாக தமிழ் நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பி.வி.சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ஒலிம்பிக்கில் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு சிந்துவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ப
முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இ
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
இந்திய சினிமாவில் ச
வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந
என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தே
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிற
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண
