தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர், தே.மு.தி.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பின்னர் 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து வருகிறோம். ‘இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே’ என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போதுதான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.
கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை-எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை
தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம
மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்
இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத
