ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் செய்யும் வகையில், `இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கிண்டலடித்துள்ளார். ஒன்றிய அரசின் சொத்துக்களை ஏலம் விட்டு நிதி திரட்டும் ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தின் மூலம், நாட்டின் சொத்துக்களை தனது பணக்கார முதலாளித்துவ நண்பர்களுக்கு மோடி தாரை வார்த்து வருவதாகவும், 70 ஆண்டுகளாக பிற கட்சிகள் சேர்த்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் மோடி அரசு விற்று வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `எந்தவொரு அரசும் நாட்டின் இயற்கை வளத்தை எதிர்கால சந்ததிக்கு பயன்படும் வகையில் பெருக்க செய்வார்கள். ஆனால், மோடி அரசு அவருடைய முதலாளி நண்பர்கள் லாபம் அடையும் வகையில் மதிப்பு மிக்க நமது சொத்துக்களை அழித்து வருகிறார். முதலில் மனசாட்சியை விற்றார். தற்போது…,’ என்று கூறியுள்ளார். மேலும், ‘இந்தியா விற்பனைக்கு’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற
இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ
ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த
மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய
