மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று துவங்கியது.
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்மூட்டி. கடந்த 2017ம் ஆண்டு இவரின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘கஸாபா’. இந்த படத்தில் மம்மூட்டி பேசிய வசனங்கள் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த வசனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றன
இதனால் கேரளாவில் பெரிய பூகம்பமே வெடித்தது. இந்த வசனங்களை கண்டித்து நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் மம்மூட்டி எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெண் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ‘புழு’ என்ற புதிய படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து முதல்முறையாக நடிகை பார்வதி நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மம்மூட்டி, பார்வதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு துவங்கவுள்ளது.



சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி
மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
