வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11-ம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பேருந்து, லாரி மற்றும் 4 கார்கள் சிக்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. நிலச்சரிவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நைனிடால் பகுதியில் சாலையில் பேருந்து ஒன்று 14 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் சென்றது.
திடீரென மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் மண், கற்கள் இவற்றுடன் மரங்களும் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தன. இதையறிந்த பேருந்து ஓட்டுனர் உஷாராக வண்டியை முன்பே நிறுத்திவிட்டார்.
நிலச்சரிவை கண்ட பயணிகளில் இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியே வெளியே குதித்தும், சிலர் வாசல் வழியே வெளியேறியும் தப்பியோடினர். இதன்பின் பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்றது.
ஒரு சில நிமிடங்கள் முன்னே சென்றிருந்தால் பேருந்து விபத்தில் சிக்கி பெருமளவு சேதம் ஏற்பட்டிருக்க கூடும். டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்
மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத
