ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
மேலும், அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இந்நிலையில், அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரை சுமூகமாக முடிக்க உக்ரைன் அதிகாரத்தை ராணுவம் கைப்
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹ
நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுற
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி
ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில
சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொர
