4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளோம் எனக்கூறும் உ.பி. அரசு மீது பிரியங்கா விமர்சனம்!
Aug18
4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளோம் எனக்கூறும் உ.பி. அரசு மீது பிரியங்கா விமர்சனம்!
உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த துறையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டதற்கு, அதற்கான தகவல்கள் இல்லை என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உ.பி. மீது குற்றம்சாட்டியுள்ளார். ‘‘தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. 4 லட்சம் வேலை எந்தெந்த துறைகளில் வழங்கப்பட்டுள்ளன என்று மாநில இளைஞர்கள் விரும்புகிறார்கள்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.