மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றை காவற்துறையினரின் சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்து உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது காவற்துறையினர் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்தபோதும் உழவு அயந்திரம் காவற்துறையினரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில்காவற்துறையினர் அதனை துரத்திச் சென்ற நிலையில் உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய துசாந்தன் என்பவரது தோள்பட்டடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா
எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிண
நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் ஆரம்பித்துள்ள
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
