தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழகத்தில் 1,964 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 91 ஆயிரத்து 94ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 28பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில், தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000 கட்டணமாக நிர்ணயிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 கட்டணம் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்
மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந
தே.மு.தி.க. தலைவர்
தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத