பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல் இருந்து வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பாக்கியலட்சுமி என்று மனைவியும், மதுமிதா (20), மலைராஜா என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். மதுமிதா தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், ஆறுமுகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனால் பாக்கியலட்சுமி, மேக்கூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், தந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மதுமிதா, அவர் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் காலை, மதிய என 2 வேளையும் உணவு சாப்பிடவில்லை. மதியம் வீட்டில் படுத்து தூங்கிய மாலை நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பாக்கியலட்சுமி மதுமிதாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மதுமிதாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக
மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத