இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு்ள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் நாம் அனைவரும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி - நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டிய மிக முக்கியமான கடமையில் இருக்கிறோம்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகம் இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நெஞ்சத்திலும் குடிகொண்டிருக்கிறது.
ஆயுதமின்றி - அறவழி ஒன்றையே தங்களின் தொய்வில்லா போராட்டமாக நடத்திக்காட்டி இந்தியாவிற்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க கிடைத்த இந்தச் சுதந்திரம் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரியதொரு கருவூலம்.
தமிழ்நாடும், இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ் பெற்றிடப் பாடுபடுவோம் - அயராது உழைத்திடுவோம் என்று 75-வது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக்
சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து வி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர
இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்
