ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சாா்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் ரந்தீப் குலேரியாவிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
கொரோனா பெருந்தொற்றின் பரவல், இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இருப்பினும், 2-வது அலையைப் போன்று 3-வது அலை மோசமானதாக இருக்காது. 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவாா்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், பெரியவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா், குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
ஏற்கனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கொரோனா தொற்று தாக்கியதாக செரோ ஆய்வு முடிவு கூறுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும். அதன்பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது தீவிரமான பாதிப்பாக இருக்காது. கொரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றுகிறது. இப்போதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடா்ந்து கூறுகிறோம் என்றார்.
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து வழங்கியதன் மூலம் தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந் யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வேட் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
