தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. முழுக்க முழுக்க இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று, தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இ-பட்ஜெட் என்பதால் அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கும்போது, அந்த வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரை மூலம் ஓடுகிறது. அதன்மூலம் பட்ஜெட் தொகுப்பை எம்எல்ஏக்கள் கவனித்தனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.
டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையி ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ் கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை