தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விக்ரமின் சாமி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர் சி.யின் அரண்மனை ஆகிய படங்கள் 2 பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் 3 பாகங்கள் வெளியானது. இந்தியன் 2-ம் பாகம் தயாராகிறது
இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் 2-ம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பா.ரஞ்சித் இயக்கினார். குத்து சண்டையை மையமாக வைத்து தயாரான இந்தப் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.
படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறும்போது, “சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன்கதையாக வைத்து படம் எடுக்க யோசிக்கிறேன். 1925-ல் ஆரம்பிப்பதுபோல் கதை இருக்கும். இதை வெப் தொடராகவோ அல்லது திரைப்படமாகவோ எடுக்கும் எண்ணம் உள்ளது’’ என்றார்.
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ
பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர