தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் கோபத்தை மையப்படுத்தி உருவான ரௌத்திரம் பகுதியை அரவிந்த் சாமி இயக்கி இருந்தார்.
இயக்குனராக அறிமுகமானது குறித்து அரவிந்த் சாமி கூறும்போது, ‘90-களின் ஆரம்பத்தில் இருந்தே இயக்கத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்து வந்தது. நவரசா குறித்து மணி ரத்னம் என்னுடன் பேசியபோது நான் அதில் பங்கேற்க முடியுமா, எனக் கேட்டார். நான் அவரிடம் இயக்குனராகவா அல்லது நடிகராகவா எனக் கேள்வி எழுப்பினேன். அது உன்னுடைய தேர்வு தான் என்று கூறிவிட்டார். இப்படித்தான் இயக்குனராக எனது பயணம் துவங்கியது.
இயக்குனராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். படைப்பை உருவாக்குவதில் எதைப் பற்றியும் எந்த சந்தேகமோ, தயக்கமோ, என்னிடம் சுத்தமாக இல்லை. பல ஆண்டுகளாக நான் பல திறமையான இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பணிபுரிந்தது தான் அதற்கு காரணம். அவர்கள் தான் என் வழிகாட்டி.
ஆந்தாலஜியில் கோபத்தை நான் தான் தேர்ந்தெடுத்தேன். அதற்கு காரணம் வழக்கத்தை மீறி ஏதாவது செய்ய, கோபம் ஏற்றதாக இருக்குமென்று நினைத்தேன். ஒரு ஐடியா என்னுள் தோன்றியது. கோபம் கிடைத்தால், அதை முன்வைத்து ஒரு கதையை கூறலாம் என்று முடிவு செய்தேன். அது நிறைவுபெற்று, இப்போது எனது படைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவது, மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது’ என்றார்.

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘பà®
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகà
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹிà
பொன்ராம் இயக்கத்தில்
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு
இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன்
பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கà
அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சà
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
