நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது!...
Aug11
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது!...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு முன்னதாகவே, இன்றுடன் முடிகிறது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து முறையான பதிலளிக்கக்கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தன. இதனால் அனைத்து நாட்களிலும் அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் நேற்று இந்த கூட்டத்தொடரில் ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.