கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத்தை விளங்கிக்கொள்ளாமலேயே இராணுவ தளபதி பேசி இருக்கின்றார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது இது தொடர்பில் கவலையடைகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இராணு தளபதி சவேந்திர சில்வாவின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு தொடர்பில் கவலையடைகின்றோம். ஏனெனில் தலைவர் ரணில் விக்ரமசிங்க இராணுவ தளபதி தொடர்பாகவோ இராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்பாகவோ விமர்சிக்கவில்லை. அதேபோன்று தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாகவோ தடுப்பூசி ஏற்றும் இடம் தொடர்பாகவோ கதைக்கவில்லை. இதனை புரிந்துகொள்ளாமலேயே இராணுவ தளபதி இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார்.
அத்துடன் சுகாதார சட்டத்துக்கமைய யாரேனும் ஒருவர் தடுப்பூசி எந்த இடத்தில் பெற்றுக்கொண்டார் என அறிவிப்பு செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது நோயாளரின் உரிமையாகும். அதனால் இந்தளவு சிறுபிள்ளைத்தனமான அறிவிப்பொன்றை தெரிவிக்கும் நிலைமைக்கு இராணுவ தளபதி சென்றமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம் என்றார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்க
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
அச்சுவேலி - வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்
<