கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 20 மில்லியனை (2 கோடி) தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா.
இவருக்கு அடுத்ததாக, நடிகை காஜல் அகர்வாலை 1.92 கோடி ரசிகர்களும், சமந்தாவை 1.8 கோடி ரசிகர்களும், ரகுல் பிரீத் சிங்கை 1.73 கோடி ரசிகர்களும், ஸ்ருதிஹாசனை 1.72 கோடி ரசிகர்களும் பின் தொடர்கின்றனர்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்
தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
தளபதி விஜய் நடிப்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங
சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள