கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை மீறியவகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின் மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிப்பது உறுதி செய்யப்படுவதுடன் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைவாக பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்பட வேண்டும் என்று அறிவிப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அனைத்து பஸ் உரிமையாளர்கள் சங்கங்களும் போக்குவரத்து சேவைக்கான சுகாதார ஆலோசனை வழிகாட்டிகளுக்கு உடன்பட்டுள்ளன. தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் மீறப்படுமாயின் தற்போதைய டெல்டா தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத் வேண்டி ஏற்படும். பொது மக்களின் நலனே முக்கியமானது. அதனை கருத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தி
வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
