குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓடுகள், மான் கொம்பு மற்றும் யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து அழகப்பபுரத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கடையில் ஆமை ஓடுகள், மான் கொம்பு, அரிய வகை சங்கு, கடல் விசிறி, முள்ளம்பன்றி உடலில் இருக்கும் முட்களால் செய்யப்பட்ட கலை பொருட்கள், மற்றும் யானை தந்தந்தால் செய்யப்பட்ட அரிய பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவை அரசால் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
இந்த பொருட்களை வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை நடத்தி வந்த நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் அரசடி தெருவை சேர்ந்த சங்கர், ஆன்றோ போரஸ் மற்றும் கன்னியாகுமரி ஜோசப் டவுனை சேர்ந்த சாம்ராஜ் ஆகிய 3 பேரையும் பிடித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த
கொரோனா பரவலால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப
அ.தி.மு.க. 
இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா
சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு