மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டாங்கன்யிகா மாகாணத்தில் டாங்கன்யிகா என்கிற ஏரி உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி பிரபலமானதாகும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் டாங்கன்யிகா ஏரியில் 80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றது. ஏரியின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.
இந்த விபத்தில் சிறுவர்கள் 7 பேர் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே வேளையில் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 76 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்தி
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப
மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்ட
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
