கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற 8 வயது மகள் உள்ள நிலையில், கடந்த ஜூலை 12-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டி இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தை பிறந்தபோது ‘18 வருடங்களுக்குப் பிறகு அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்’ என்று தெரிவித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது தந்தையின் பெயரான ‘தாஸ்’ என்பதை தனது மகனுக்கு சூட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமில
ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சு
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந
தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்
நடிகர் மயில்சாமி புது மணத் தம்பதிகளுக்கு பெட்ரோலை அன்
தமிழ் சினி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச
முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இ