வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். இதனை நாம் வரவேற்கின்றோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கொரோனாத் தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆரம்பத்தில் ஆர்வத்தைக் காட்டவில்லை. எனினும், அவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாகாண மக்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
கொரோனாவை விரட்டக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசியே. எனவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதில் அரசு அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றது.
தடுப்பூசிகளைப் பெற்றுவிட்டோம் எனக் கருதி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் இருக்கக்கூடாது.
கொரோனாத் தடுப்புக்கான சுகாதார விதிகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” – என்றார்.
அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி
