வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் தேர்வு செய்தது.
அதனபடி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அதிர்ச்சி அளித்தனர். 45 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது.
அடுத்து இறங்கிய வேட். சம்பா, வெஸ் அகர் பொறுமையுடன் ஆடினர். வேட், சம்பா தலா 36 ரன் எடுத்து அவுட்டாகினர். வெஸ் அகர் 41 ரன் எடுத்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.1 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹொப் 38 ரன்னில் வெளியேறினார். 72 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 38 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. பூரன் அரை சதமடித்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹோல்டர் 52 ரன்னில் வெளியேறினார்.
இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நே
சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
