புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, இரவு நேரங்களில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக விமான ஓடுதள பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் பேசினார்.
ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக காரைக்கால் கோவில் நகரத்தை உடான் திட்டத்தின்கீழ் கொண்டு வருவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த
தனியார் மருத்துவமனைகளில்
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வல சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா
