தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,000 ஐ தாண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 46,000 சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், 6,000 பேர் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை தனிமைப்படுத்தல் விதிகளும், பயணக்கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அமுலில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் முகக்கவசத்தை சரியாக அணியாத நபர்களை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத