தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். படத்திறப்பு விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் ஜனாதிபதி பங்கேற்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடு சட்டப் பேரவைச் செயலகத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
முன்னதாக டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசு அனைத்து துறைகளிலும்
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவ
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால
கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ
புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி
