1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக மத்திய பா.ஜனதா அரசு புதிய கல்விக்கொள்கையை உருவாக்கி உள்ளது. இந்த கொள்கைக்கு கடந்த ஆண்டு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வருகிற 29-ந்தேதி உரையாற்றுவதாக கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘கற்றல் வரம்பை மாற்றுவதற்கும், கல்வியை முழுமையாக்குவதற்கும், சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு வலுவான அடித்தளங்களை உருவாக்குவதற்கும் ஒரு வழிகாட்டும் தத்துவமாக புதிய தேசிய கல்விக்கொள்கை விளங்குகிறது. இந்த கொள்கையின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி வருகிற 29-ந்தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த கொள்கையை அமல்படுத்துவதில் தற்போது வரையிலான முன்னேற்றம், இந்த கொள்கையில் அடுத்தடுத்து வரவிருக்கும் திட்டங்களுக்கான செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி தனது உரையில் தெரிவிப்பார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்
இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற
உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
