சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நான் ஈ, புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கன்னட நடிகர் கிச்சா சுதீப், சமீபத்திய பேட்டியில் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி பேசி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “சூரரை போற்று படத்தை ஓ.டி.டி.யில் பார்த்தேன். நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் சூர்யாவுக்கு ஆஸ்கார் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர். அந்த படத்தில் பிழை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஒரு படத்தை பார்ப்பதும் கதையாக படிப்பதும் வெவ்வேறானது. இந்த படம் கதாநாயகனை கொண்டாடும் படம் இல்லை. இதில் நடிக்க அவர் முன்வந்ததற்கு பெரிய துணிச்சல் வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி
நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூ
திருமணம் ஜூன் 9ம் தேதி நடக்கும் நிலையில் விக்னேஷ் சிவன
நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
