ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டார். முதல் சுற்றில் வென்ற பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.
வாள்வீச்சில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.
தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி தனது டுவிட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிட்டார்.
இந்நிலையில், தமிழக வீராங்கனை பவானி தேவியை பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நீங்கள் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தீர்கள். அதுதான் முக்கியம். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம். உங்கள் பங்களிப்பைக் கண்டு இந்த தேசம் பெருமை கொள்கிறது. இந்திய மக்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உங்களது முயற்சியைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொரு படி என பதிவிட்டுள்ளார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ள
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும்
தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ
திமுக அரசு அனைத்து துறைகளிலும்
உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற
மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
கொரோனா ப
