கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று. அங்கு ஏற்கனவே கொரோனா வைரசின் 3 அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய சூழலில் 4-வது அலை எந்நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை பல்வேறு வழிகளில் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியாகச் சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 போலீஸ் அதிகாரிகளை போராட்டக்காரர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை போலீசார் மீது வீசி எறிந்தனர். அதேபோல் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர். தடியடியும் நடத்தினர். இதனால் பாரீஸ் நகரமே கலவர பூமியாக காட்சியளித்தது
ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
போலாந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில
ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியா
இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய
உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களா உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்
