இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே சமயம் கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒரேநாளில் 30,093 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,11,74,322 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 374 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 4,06,130 பேர் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் கடந்த 24 மணிநேரத்தில் , 45,254 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆயுதம் என்று சொல்லப்படும் கொரோனா தடுப்பூசி 41,18,46,401 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று இந்தியாவில் 38,164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு 30,093ஆக குறைந்துள்ளது மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பை காட்டுகிறது.