திபெத் நாட்டுக்கு சீனா உரிமை கோருவது மட்டுமின்றி, அதை தனது கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளது. இதன் எல்லை அருகே உள்ள அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் பகுதி என்றும், அது தங்களுக்கு சொந்தம் என்றும் கூறி வருகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் கடந்த புதன்கிழமை முதல் முறையாக திபெத்தில் உள்ள யிங்ச்சி பகுதிக்கு திடீரென வந்து சென்றுள்ளார். மெயின்லிங் விமான நிலையத்தில் இறங்கிய அவர், நியாங் ஆற்று பகுதிக்கு சென்று பிரம்மபுத்திரா ஆற்றுப் பகுதியை பார்வையிட்டுள்ளார். யிங்ச்சியில் இருந்து திபெத்தின் தலைநகரான லாசா வரையிலான 435.5 கி.மீ மின்சார ரயில் சேவையை சமீபத்தில் சீனா தொடங்கியது. இதனையும் அவர் பார்வையிட்டார்.
ஜின்பிங் கடந்த புதன்கிழமை திபெத் பகுதிக்கு வந்து சென்ற நிலையில், 2 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் அவரது பயணம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளின் குறுக்கே அணை கட்டி சீனா அடாவடி செய்து வருகிறது. இந்நிலையில், பிரம்மபுத்திரா ஆற்றை அவர் பார்வையிட்டது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.
30 ஆண்டுகளில் முதல் முறையாக…
அதிபரான பிறகு முதல் முறையாக ஜின்பிங் திபெத் வந்துள்ளார். 1990ம் ஆண்டு அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின் திபெத் சென்றார். அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய அதிபர் ஜின்பிங் திபெத் சென்றுள்ளார். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு துணை அதிபராக இருந்தபோது அவர் திபெத் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
உக்ரைனின் தெற்குப் பகுதியான கெர்சன் நகரைக் கைப்பற்றி
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
உக்ரைனில் போரின் காரணமாக பதுங்கு குழியில் வாழ்ந்து வர
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான ப
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாத
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
