ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி
Jul24
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் லர்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர் பின்னர் பலியாகி உள்ளார். அவர் ஜாவீத் ஆஹ் மாலிக் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரது வீட்டின் அருகில் வைத்து பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.