பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் ஜான் கொக்கேன் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிப்பதாக ஜான் கொக்கேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “நன்றி தல அஜித் சார். எப்போதும் என்னை உத்வேகப்படுத்தினீர்கள், என்னையே நம்புவதற்கும் நீங்கள் தான் ஊக்கப்படுத்தினீர்கள். வீரம் படத்தின் ஷூட்டிங் நாட்களில் உங்களுடன் செலவிட்ட நேரம் எனக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத்தந்தது.
ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கவும், சிறந்த மனிதராகவும் மாற நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள். இந்த வேம்புலி கதாபாத்திரத்தை உங்களுக்காக அர்ப்பணிக்கிறேன் சார். லவ் யூ சார்.” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஜான் கொக்கேன், அஜித் நடிப்பில் வெளியான வீரம், யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப், சிம்பு நடித்த ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகை ஒருவர், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தன்னை அழைத்தத
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப
பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர
தளபதி விஜய் நடிப்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ
நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
