நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மனிதநேயத்தை வலியுறுத்தும் திருநாளான பக்ரீத் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் திருநாள் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து, அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதையும் சொல்கிறது. உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும் படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை உள்ளிட்டவற்றையும் இந்த திருநாள் உணர்த்துகிறது.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை, புத்தாடை, இனிப்பு, பிரியாணி என இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மதுரை மகபூப்பாளையம் பகுதியில் தவ்ஹித் ஜமாத் சார்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.


டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல
புதுச்சேரி மாநிலத்தில்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்க அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந் வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
