தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேவை புரிந்து வரும் ஆட்டோ ஓட்டுநருக்கு, மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பி.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக். இவர் கொரோனா இரண்டாவது அலையின்போது, தனது ஆட்டோவில் நோயாளிகளை கட்டணமின்றி இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சேவை புரிந்து வந்தார். இவரது தன்னலமற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பி.சி.பட்டியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட நேற்று முன்தினம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் நின்றிருந்த கார்த்திக்கின் ஆட்டோவில் மருத்துவத்திற்கு இலவசம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததை பார்த்த ஆட்சியர் முரளிதரன் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கினார். தொடர்ந்து, ஆட்டோவில் நின்றிருந்த கார்த்திக்கிடம் சென்ற ஆட்சியர், அவரது சேவையை கவுரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பி.சி.பட்டி கிராம மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய
ஆப்கானிஸ்தானை
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற