More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!
Jul 17
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகைய பெருமை இருக்கிறதோ, அதேபோன்று எனக்கும் பெருமையாக இருக்கிறது.



நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடு தான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. மக்களுடைய நம்பிக்கையும் அது தான்.



உங்களில் பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்க்கையாக இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும், உங்கள் திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் தான் உங்களை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது.



இனிமேல் உங்களுக்கு பொருளாதார தடைகள் இல்லாதவாறு அரசு பார்த்துக்கொள்ளும். விளையாட்டில் திறமையுள்ளவர்களின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.



விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறத் தேவையான பொருட்கள், தரமான உணவு, உறைவிடம், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். விளையாட்டு போட்டிகளில் பெண்கள் அதிக ஆர்வத்தோடு பங்கெடுக்கிறார்கள். அவர்களுக்கான முழு உதவியையும் இந்த அரசு செய்யும்.



ஆண் வீரர்களுக்கு பொருளாதார தடை மட்டும்தான் இருக்கும். பெண் வீரர்களுக்கு அத்தோடு சேர்ந்து குடும்ப தடைகள், சமுதாய தடைகள் அதிகமாக இருக்கும். இந்த தடைகளை எல்லாம் தாண்டித்தான் ஒலிம்பிக் போட்டிகளில் பயிற்சிபெற நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களது திறமையைத் தமிழ்நாடு அரசு மெச்சுகிறது.



அடுத்தடுத்து நடைபெற இருக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் சூழலை அரசு ஏற்படுத்தித் தரும் என்று உறுதியளிக்கிறேன். இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும் என்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-à

Mar08

உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாà

May25

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குறà®

Oct02

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு

May14

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்

Mar08

கள்ளக்குறிச்சி அருகே சினிமா பட பாணà®

Apr02

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா à

Jun26

உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த

Mar15

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக

Mar05

 கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ரà

Oct10

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு

Feb19

நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி

Oct25

உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமரà¯

Jun14

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்களà¯

Mar28

தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு முà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:38 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (12:38 pm )
Testing centres