More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாடு திரும்பிய திகாம்பரம் சிறிகொத்தவில் இரகசியப் பேச்சு!
நாடு திரும்பிய திகாம்பரம் சிறிகொத்தவில் இரகசியப் பேச்சு!
Jul 16
நாடு திரும்பிய திகாம்பரம் சிறிகொத்தவில் இரகசியப் பேச்சு!

தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் நாடு திரும்பிய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்குச் சென்று முக்கிய சந்திப்பில் பங்கேற்றுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.



ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவைச் சந்தித்து கடந்தகால மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளார் எனவும் அந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.



இன்னும் ஒரிரு நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.



2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய திகாம்பரத்துக்கு நல்லாட்சியின்போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டது. 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் யானை சின்னத்தின் கீழ்தான் திகாம்பரம் போட்டியிட்டார். 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் முற்போக்குக் கூட்டணியாக யானை சின்னத்தின் கீழ்தான் களமிறங்கியது.



எனினும், 2020 ஜனாதிபதித் தேர்தலில் திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவு வழங்கினார். பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டார்.



தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்குள் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பாக மலையகத் தலைவர்களுக்கு உரிய இடமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இவ்வாறானதொரு பின்புலத்தில் ஐ.தே.கவுடன் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளமை அரசியல் களத்தில் பரபரப்பாகப்  பேசப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பிà

Apr30

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறà

Mar09

7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா à

Mar28

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த

Jul11

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி

Feb03

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிà

Jan15

நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்à®

Mar07

கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங

Jan21

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி

Mar17

மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சà

Sep21

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூரà

Mar26

இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுà®

Sep08

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபà¯

Jul07

கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப

Feb04

அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையாà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:19 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:19 am )
Testing centres