கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 19 மில்லியனை தாண்டியுள்ளது. இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், சுருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார் ராஷ்மிகா.

கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ
நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தி
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தர
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும
