More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மேகதாது அணை கட்டியே தீருவோம் - எடியூரப்பா!
மேகதாது அணை கட்டியே தீருவோம் - எடியூரப்பா!
Jul 17
மேகதாது அணை கட்டியே தீருவோம் - எடியூரப்பா!

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது.



இதற்கான திட்ட அறிக்கையை தயரித்துள்ள அரசு, அதற்கு ஒப்புதல் வழங்க கோரி மத்திய அரசின் ஜல்சக்தித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வரைவு அறிக்கை நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.



தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி குழு டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி கடிதம் வழங்கியது.



இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.



டெல்லி சென்ற கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இரவு 7 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இந்த சந்திப்பின் போது  மேகதாது திட்டம் உள்பட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதித்தததோடு, அவற்றுக்கு விரைவாக அனுமதி வழங்குமாறு எடியூரப்பா கோரிக்கை விடுத்தார்.



முன்னதாக எடியூரப்பா கர்நாடக பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-



மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழக முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். ஆனால் தமிழகம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் சாதகமான அம்சங்கள் உள்ளன.



ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகதாது அருகே அணை கட்டுவது கர்நாடகா மாநிலத்தின் உரிமை என்பதால் உரிய அமைப்புகள் மற்றும் ஆணையங்களுடன் ஏற்கனவே ஆலோசித்து அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணை விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுகிறேன்.



இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் சக்திமீறி முயற்சி செய்கிறோம். அதனால் மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி. கர்நாடக மக்களுக்கு இந்த உறுதி மொழியை அளிக்கிறேன்.



இவ்வாறு எடியூரப்பா கூறினார்.



எடியூரப்பா இன்று (சனிக்கிழமை) பல்வேறு துறைகளின் மந்திரிகளை சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு இன்று மாலை பெங்க ளூரு திரும்புகிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug04
Apr03

கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனà®

Feb22

எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு

Mar03

இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூகà¯

Jul14
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:30 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:30 am )
Testing centres