இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘தி பேமிலிமேன் 2’ வெப்தொடர் சர்ச்சையை கிளப்பியது. அதில் சமந்தா ஏற்று நடித்த போராளி கதாபாத்திரத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் தொடரை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
விரைவில் இந்த தொடரின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது. இதில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவின. சர்ச்சை தொடரில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி சம்மதித்தார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு நடிகர் விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் ஷாகித் கபூருடன் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறேன். மனோஜ் பாஜ்பாயுடன் சேர்ந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவருடன் நடிக்க ஆர்வம் உள்ளது’’ என்றார். இதன்மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
அவர் நடித்துள்ள லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்ப
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ ப
நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய்
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந
நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்க
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியா
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராம
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
