இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் -நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 1998ம் ஆண்டில் ஆஸி.,க்குஎதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹர்பஜன்சிங். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்,20-20 போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 417 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட் எடுத்து சாதனை படைத்த ஹர்பஜன்சிங் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார்.
பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை திருமணம்செய்து கொண்ட பின்னர் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்து நடிகர் ஆனார். டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹர்பஜன்சிங் – கீதா பாஸ்ரா தம்பதிக்கு முதல் குழந்தை பெண் குழந்தை இருக்கும் நிலையில் நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹர்பஜன்சிங் – கீதா பாஸ்ரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம
தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு
கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட
ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக
மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய
மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நா
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல
