உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டின் தாஷ்கண்ட் நகரில், ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்துப் பேசினார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவம் மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆதரவாக உள்ளனர்.
அமெரிக்கப் படையினர் வெளியேறி வரும் சூழலில், தலிபான்கள் நாட்டின் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி வருகின்றனர். அந்த நாட்டின் 421 மாவட்டங்களில் 3ல் ஒரு பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறப்படுகிறது.
இதில் ஏராளமான மாவட்டங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதிகளாகும்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நடத்திய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய மந்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பு சூழல் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான நம்முடைய ஆதரவு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீà®
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழà
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவà
பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றினà¯
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிà
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்à
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வà¯
மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்ததà¯
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைத் திருப்பங்களை தாம் "நெரà
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ
கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆகà¯
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எà®
